விஜய்க்கு கிடைக்கும் தரமான இமேஜ்..
சீமானை பொது வேட்பாளராக அறிவித்தால்.. விஜய்க்கு கிடைக்கும் தரமான இமேஜ்.. திமுகவுக்கு பெரிய நஷ்டம்!
அம்பை தொகுதியில் சீமானை பொது வேட்பாளராக திமுக ஏற்பதால், மிகப்பெரிய நஷ்டத்தை அக்கட்சி அடையும் என்று பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் முதல்வர் விஜய்யின் இமேஜ் இன்னும் பலமடையும் என்பதால், திமுக அப்படியான முடிவுகளை எடுக்குமா என்பது சந்தேகம் என்றும் அரசியல் விமர்சகர்கள் மத்தியில் சொல்லப்படுகிறது. அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் களமிறங்குகிறார். இருப்பினும் நாதகவினர் மத்தியில் சீமான் பொது வேட்பாளராக களமிறங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. திமுக, அதிமுக ஆதரவு அளித்தால், நிச்சயமாக நானும் ஏற்பேன் என்று சீமான் தெரிவித்துள்ளார்.

ஆனால் சீமானை பொது வேட்பாளராக ஏற்க இரு கட்சியும் விரும்பாது என்று தெரிகிறது. ஒருவேளை சீமானை பொது வேட்பாளராக ஏற்றால், அது திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் பின்னடைவு தான் என்று பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இரு முனை போட்டியாக இருந்த தேர்தல் களம், தவெகவின் அபரித எழுச்சியால் மும்முனை களமாக மாறியுள்ளது. ஏற்கனவே திமுக, அதிமுக இணைந்து விஜய்யை எதிர்க்கிறார்கள் என்று தவெக பேசி வருகிறது. இது மக்கள் மத்தியில் பெரிதாக எடுபடாத சூழலில், திமுக மற்றும் அதிமுக இரு கட்சிகளும் இணைந்து சீமானை பொது வேட்பாளராக அறிவித்தால், அது விஜய்யின் இமேஜ்க்கு மிகப்பெரிய பலமாக அமையும். தமிழ்நாட்டின் 3 பெரிய கட்சிகளும் இணைந்து தான் விஜய்யை எதிர்க்க முடியும் என்று தவெக பிராண்ட் செய்ய தொடங்கும்.
