News இந்து முன்னணி தலைவர் கார் மீது மோதிய பைக்
இந்து முன்னணி தலைவர் கார் மீது மோதிய பைக்.. திருப்பூரிலும் மர்ம நபர்.. உளவுத்துறைக்கு போன கோரிக்கை
கோவை: கோவையில் இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியத்தின் கார் மீது பைக் மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே அவருக்கு கொலை மிரட்டல் இருப்பதாக கூறப்படும் நிலையில், கோவை மற்றும் திருப்பூரில் அடுத்தடுத்து நிகழ்ந்த சம்பவங்களின் பின்னணியில் ஏதாவது சதித்திட்டம் உள்ளதா என விசாரிக்க வேண்டும் என்று இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் நேற்று கோவையில் உள்ள அமைப்பின் அலுவலகத்திற்கு வந்திருந்தார். அப்போது அலுவலகத்தின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த அவரது கார் மீது, பயங்கர வேகமாக வந்த பைக் ஒன்று, எதிர்பாராதவிதமாக மோதியது.
